ரொட்டும்ப ரசிகவின் உதவியார்கள் கைது
மாகந்துரே மதுஷுக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படும் ரொட்டும்ப ரசிகவின் நான்கு 4 உதவியாளா்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கி ஒன்றும், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன கைத்துப்பாக்கி மற்றும் மகசீன் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாவரல மற்றும் தெய்யந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முலட்டியன மற்றும் மாகந்துர பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து 12 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் முலட்டியன மற்றும் மாகந்துர பிரதேசத்தை சேர்ந்தவா்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திஹாகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment