பொலிஸாருக்கு எதிரான மனு நிராகரிப்பு
கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) விசாரணைக்கு எடுக்காது நிராகரித்துள்ளது.
காலி முகத்திடல் உட்பட நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, ரைட் டூ லைப் அமைப்பு சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த மனு தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த முடிவை அறிவித்துள்ளது.
இந்த மனு இன்று எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
பொலிஸாருக்கு எதிரான மனு நிராகரிப்பு
Reviewed by Author
on
July 19, 2023
Rating:

No comments:
Post a Comment