இலங்கையில் அரங்கேறும் கொடூரம் - 370 பேர் படுகொலை
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 370 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் மாதாந்தம் 40 முதல் 50 வரையிலான படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், நாகரீகமற்ற மனித சமூகம் வாழும் நாடாக மாறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொலைக்கான காரணங்கள் என்னவென்று பார்கின்றபோது.
போதைப்பொருள் வியாபாரம், காணிப் பிரச்சினை, தகாத உறவு போன்ற காரணிகளினால் இடம்பெறும் மனித படுகொலைகளை தடுப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை டலஸ் அழகப்பெருமவின் இந்த குற்றச்சாட்டுக்கு, போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் விரிவான திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment