தினேஷ் ஷாப்டர் மரணம் - நீதிமன்றின் புதிய உத்தரவு
தற்போது அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மரணிக்கும் போது அணிந்திருந்த ஆடைகளை பெற்று அதனை அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய மருத்துவ நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மரண விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
இங்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், பொலிஸ் குற்ற விசாரணை குழுவால் மரணம் இடம்பெற்ற இடத்திலும், இறந்தவரின் வாகனத்திலும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் மருத்துவ நிபுணர் குழுவிடம் ஒப்படைக்குமாறு மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
பின்னர், இதுதொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment