இத்தாலி படகு விபத்தில் 41 பலி
இத்தாலியின் லம்பேடுசா தீவில் அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் இருந்தவர்களே உயிரிழந்துள்ளனர் என உயிருடன் மீட்கப்பட்ட 4 தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிருடன் தப்பியவர்களில் 3 ஆண்கள் மற்றும் 1 பெண் உள்ளடங்குகிறார்கள் அத்துடன் மூழ்கிய படகில் மூன்று குழந்தைகள் உட்பட 45 பேர் சென்றதாக மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்தனர்.
லம்பேடுசா இத்தாலியின் தெற்கே உள்ள தீவு. 2000 களின் முற்பகுதியில் இருந்து, முக்கியமாக லிபியாவிலிருந்து வந்து, குடியேறுபவர்களுக்கான முக்கிய ஐரோப்பிய நுழைவுப் புள்ளியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலியை சென்றடைவதற்கான முயற்சிகளில் இந்த வருடம் 1800 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி படகு விபத்தில் 41 பலி
Reviewed by Author
on
August 09, 2023
Rating:

No comments:
Post a Comment