மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் காலமானார்
மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன்(வயது -29) நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு மடுவில் காலமானார்.
கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில் நேற்று இரவு திடீர் என ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
உயிரிழப்பிற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.
தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் காலமானார்
Reviewed by Author
on
August 14, 2023
Rating:

No comments:
Post a Comment