திடீா் உடல்நலக் குறைவு - வைத்தியசாலையில் அனுமதி!சோனியா
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி தில்லியில் உள்ள கங்கா ராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா்.
காய்ச்சல் காரணமாக அவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தில்லி திரும்பிய சோனியாவுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சலும் இருந்ததால் அவா் சனிக்கிழமை மாலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவா்கள், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற பரிந்துரைத்தனா். இதையடுத்து, அவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா்.
சோனியா காந்தியின் உடல்நிலை தொடா்பாக மூத்த மருத்துவா் ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் உள்ளது. இப்போது அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. மருத்துவக் குழுவினா் அவரது உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்’ என்றாா்
திடீா் உடல்நலக் குறைவு - வைத்தியசாலையில் அனுமதி!சோனியா
Reviewed by Author
on
September 04, 2023
Rating:

No comments:
Post a Comment