மன்னாரில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது-அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அரை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
-மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
-குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்,பிரதான பொலிஸ் பரிசோதகருமான சந்தன பிரசாத் ஜெயதிலக்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் நிப்பூன் தலைமையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சாஜன் களான சிவ ராஜா(53207),முசாதிக்(62792),பொ
-கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின் குறித்த இரு சந்தேக நபர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான பல்வேறு திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது-அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு.
Reviewed by Author
on
September 06, 2023
Rating:

No comments:
Post a Comment