அண்மைய செய்திகள்

recent
-

நீதிபதி வெளியேறியமை நீதித்துறைக்கு அவமானம்!

 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ள செய்தி இலங்கையின் நீதி துறைக்கு கழுவு முடியாத கறையாக படிந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதனூடாக நீதித்துறை மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குருந்தூர் மலை விவகாரம்

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளன.

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறிய நீதிபதி, அண்மையில் தனக்கான (நீதிபதிக்கான) பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ள அவர் தான் நீதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை நீதித்துறைக்கு மிகப்பெரும் அவமானம்

இந்த நிலைமையானது இலங்கை நீதித்துறைக்கு மிகப்பெரும் அவமானம் என்பதோடு, தமிழ் மக்கள் இலங்கையின் நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை இழக்கும் நிலைமைக்கு இட்டுச் செல்லும் சம்பவமாகவும் காணப்படுகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, இவ்வாறான நிலைமைகள் இனியும் நாட்டில் இடம்பெறாத வகையில் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதோடு, நீதிதுறை பணியாளர்களின் சுதந்திரமான பணிகளுக்கும் அச்சுறுத்தல் இல்லாத சூழல் உருவாக்கப்படல் வேண்டும் எனவும் அவர் அவலியுறுத்தினார்.

அது தவறின் நாடு மேலும் மேலும் நெருக்கடியான சூழல் நிலைக்குள் தள்ளப்படுவதோடு, எக்காலத்தில் நிலையான சமாதானமும், இனங்களுக்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படாது போய்விடும் எனவும் முன்னாள் எம்.பி தெரிவித்தார்.



நீதிபதி வெளியேறியமை நீதித்துறைக்கு அவமானம்! Reviewed by Author on September 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.