இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் நடந்த தேசிய செம்பியன்ஷிப் விமான கண்காட்சியில் நடந்த விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
விமான கண்காட்சியின் போது தரையிறங்க முற்பட்ட போது இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
Reviewed by Author
on
September 18, 2023
Rating:

No comments:
Post a Comment