தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு நிலக்கடலை வழங்கி வைப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு இன்றையதினம் (04) கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து நிலக்கடலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட
கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு ஒரு ஏக்கர் பயிர்செய்கைக்கான தலா 50 கிலோ விதை நிலக்கடலை உள்ளீடுகளும் அத்துடன் ஆரம்ப கட்ட நிலபண்படுத்தலுக்காக சிறு தொகை கொடுப்பனவும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதி பங்களிப்பில் கொக்குதொடுவாய் கமநல சேவை நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கொக்குத்தொடுவாய் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் அந்தோனிப்பிள்ளை ஜோன்ஸ்சிற்றா, விவசாய அபிவிருத்தி ஆராய்ச்சி உத்தியோகத்தர் பத்திமனோகரன் விமல்ராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர் பாஸ்கரன் தனுசன், கொக்குதொடுவாய் விவசாய போதனாசிரியர் இராசேந்திரன் நிதுஷன், கொக்குளாய் விவசாய போதனாசிரியர் தனபாலசிங்கம் துளசிராம் மற்றும் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்திருந்தனர்
தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு நிலக்கடலை வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
October 04, 2023
Rating:

No comments:
Post a Comment