சுதந்திர ஊடக கொள்கையே நடைமுறையில் உள்ளது
Neth எப்.எம். ஊடகவியலாளர்களை நினைவூட்டி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
Neth எப்.எம் அலைவரிசையில் கடமையாற்றும் பல ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நேற்று (03) கோரிக்கை விடுத்ததாகவும், மீண்டும் கோரிக்கை விடுத்து, அவ்வாறானதொன்றை செய்ய வேண்டாம் என்றே வேண்டுகோள் விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகர் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தாலும் அது கூட்டுத் தீர்மானம் என்பதால் மீண்டும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி, இவ்வாறான தவறான முன்னுதாரணங்களை நாட்டில் ஏற்படுத்த வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையேயுள்ள நட்புறவின் அடிப்படையில் அல்லாமல் சுதந்திர ஊடக கொள்கையின் அடிப்படையில் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.
சுதந்திர ஊடக கொள்கையே நடைமுறையில் உள்ளது
Reviewed by Author
on
October 04, 2023
Rating:

No comments:
Post a Comment