40 ஆண்டுகளுக்கு பின் கப்பல் சேவை
40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) மீண்டும் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இந்தியா நாகபட்டினத்தில் இருந்து பயணிகள் கப்பல் இன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் காங்கேசன்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது.
நாகப்பட்டினத்தில் இருந்து 50 பயணிகளுடன் இன்று காலை 7 மணிக்கு பயணிகள் கப்பல் காங்கேசன்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.
பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டெல்லியிலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்திருந்நதார்.
இந்த கப்பல் பிற்பகல் 2.30 மணி அளவில் மீண்டும் நாகபட்டினம் நோக்கி 30 பயணிகளுடன் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
40 ஆண்டுகளுக்கு பின் கப்பல் சேவை
Reviewed by Author
on
October 14, 2023
Rating:

No comments:
Post a Comment