புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்து உயிர் பலி
புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் என்ற 69 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி இரவு 07.30 மணிக்கு தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏறிய போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசரணைகளை மேற்கொண்டார்.
புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்து உயிர் பலி
Reviewed by Author
on
October 14, 2023
Rating:

No comments:
Post a Comment