அவிசாவளை இரட்டை படுகொலையுடன் தொடர்புடையவர் கைது
அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இருவரை சுட்டுக் கொன்று இருவரைப் படுகாயப்படுத்திய சம்பவத்திற்கு உதவிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை கட்டுவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மன்னா ரமேசுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளவா் என தெரியவந்துள்ளது.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபரிடம் 06 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 20ஆம் திகதி அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment