மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை
கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில் காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றை நேற்று (12) துப்பரவு செய்த போது இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது , LMG துப்பாக்கி தோட்டாக்கள் 57, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு இரண்டு, 261 தோட்டாக்கள், 0.22 துப்பாக்கிக்குரிய வெற்று தோட்டாக்கள் 46 அதற்குரிய தோட்டாக்கள் 3, எம் 16 துப்பாக்கிகுரிய தோட்டாக்கள் 11, சுடர் துப்பாக்கி (Flare Gun) ஒன்று என்பன கிணற்றினுள் இருந்து மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பொருட்கள் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை
Reviewed by Author
on
October 13, 2023
Rating:
Reviewed by Author
on
October 13, 2023
Rating:


No comments:
Post a Comment