மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடல் பொருட்கள் கடத்த முற்பட்ட நான்கு இலங்கை படகு:-ஒரு தமிழக படகை மடக்கி பிடித்து நடுக்கடலில் விசாரணை
ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை இன்று செவ்வாய் (24) அதிகாலை கடத்தி செல்வதாக இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கடல் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமாக 4 இலங்கை படகும் அதில் இருந்த 8 பேரையும்,அதே போன்று மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு படகையும் அதிலிருந்த 4 பேரையும் இந்திய கடலோர காவல் படை மடக்கி பிடித்து நடுக்கடலில் வைத்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களிடம் இருந்து உலர்ந்த ஒரு தொகை கடலட்டை மட்டும் மஞ்சல் போன்றவை மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடல் பொருட்கள் கடத்த முற்பட்ட நான்கு இலங்கை படகு:-ஒரு தமிழக படகை மடக்கி பிடித்து நடுக்கடலில் விசாரணை
Reviewed by Author
on
October 24, 2023
Rating:

No comments:
Post a Comment