முல்லைத்தீவு சட்டத்தரணிகளுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் சட்டத்தரணிகளும் போராட்டம்
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் இடம் பெறும் அத்துமீறல்களை நிறுத்த கோரியும் இன்றையதினம் செவ்வாய்கிழமை மன்னார் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரம் முல்லைத்தீவில் இடம் பெற்று வரும் போராட்டத்திலும் கலந்து கொண்டு நீதிபதி சரவணராஜவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எந்த ஒரு நீதி மன்றத்திலும் ஆஜராகவில்லை என்பதுடன் வழக்குகளுக்காக சமூகளித்த பொது மக்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு சட்டத்தரணிகளுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் சட்டத்தரணிகளும் போராட்டம்
Reviewed by Author
on
October 03, 2023
Rating:

No comments:
Post a Comment