பெண் அதிகாரிகளுக்கு 8 ஆண்டுகளாக இடமாற்றம் வழங்காத வட மாகாண காணி ஆணையாளர்
பெண் அதிகாரிகளுக்கு 8 ஆண்டுகளாக இடமாற்றம் வழங்காத வட மாகாண காணி ஆணையாளர்
தற்பொழுது வடக்கு மாகணசபையின் மாகணகாணி ஆணையாளராக திரு சோதிநாதன் கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் பூநகரி பிரதேச செயலகத்தில் குடியேற்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு 6.5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 2023 ம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றத்தில் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு வழங்கப்பட்டது .
இருப்பினும் குறித்த உத்தியோகத்தரின் முன்னாள் காதலன் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுவதனால் அவருடைய இடமாற்றம் வழங்கப்படவில்லை.
2024 ம் ஆண்டிற்கான இடமாற்றத்தின் பொழுது மாகண காணி ஆணையாளரினால் குறித்த பெண் உத்தியோகத்தரை தனது தலமை அலுவலகத்திற்கு இடமாற்றம் வழங்கி இருந்தார் மாகாண காணி ஆணையாளர்
.
இந்நிலையில் மாகாண காணி ஆணையாளர் திணைக்கள காணிவெளிக்களபோதனாசிரியர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தருக்கான சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தலமை அலுவலுகத்திற்கான இடமாற்றம் இரத்து செய்யப்பட்டு மீண்டும் பூதகரி பிரதேச செயலகத்தில் 2024 ம் ஆண்டு கடமையாற்ற அனுமதித்துள்ளார் மாகண காணி ஆணையாளர்
வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் திணைக்கள சேவையிலுள்ள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்ற கொள்கையின் பிரிவு 2.2.3 முரணாக மாகண காணி ஆணையாளரால் ஒரே பிரதேச செயலத்தில் 7 வருடங்கள் கடந்த நிலையில் சேவை ஆற்ற அனுமதித்தது எவ்வாறு என்று உத்தியோகத்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்
மேலும் ஆண் அதிகாரிகளின் இடமாற்ற மேன் முறையீடுகள் மேல் குறிபிட்ட பிரிவை கூறி மாகணக்காணி ஆணையாளரால் நிராகரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment