யாழிலிருந்து முல்லை நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்று (14.10.2023) மாலை 5.30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வந்த மூவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டதுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழிலிருந்து முல்லை நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்
Reviewed by Author
on
October 15, 2023
Rating:

No comments:
Post a Comment