அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு பெரிய பண்டிவிரிச்சான் ேேயாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரியர மாணவன் ஜெயதீபன் எழுதிய 'மீ எழு தலைமை கொள்' கவிதை மலர் வெளியீட்டு வைப்பு.

 மன்னார் மடு பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 2 ஆம் வருட ஆசிரிய  மாணவன் அ.ர.ஜெயதீபன் எழுதிய 'மீ எழு தலைமை கொள்' கவிதை மலர் வெளியீட்டு விழா   புதன்கிழமை(4) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.


யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மடு கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகர்,சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் எம்..கதிர்காமநாதன்,  மன்னார் லயன்ஸ் கழக தலைவர் கா. மகேந்திரன் ,கௌரவ விருந்தினராக மன்னார் மாவட்ட யதீஷ் மாணவர் தொண்டு நிறுவன பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி எஸ்.ஆர். யதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது மடு கல்வி வலயம் பண்டிவிரிச்சான் கிராமத்தை சேர்ந்த ஆசிரிய மாணவன் ஏ.ஆர்.ஜெயதீபன் எழுதிய  'மீ எழு தலைமை கொள்' கவிதை மலர்  வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்ட யதீஷ் மாணவர் தொண்டு நிறுவனத்தால்
பீடாதிபதிக்கு 'வித்தகச் செம்மல்' என்ற கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

குறித்த வெளியீட்டு விழாவில்   பிரதம, சிறப்பு,கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட நான்கு பேரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




















மன்னார் மடு பெரிய பண்டிவிரிச்சான் ேேயாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரியர மாணவன் ஜெயதீபன் எழுதிய 'மீ எழு தலைமை கொள்' கவிதை மலர் வெளியீட்டு வைப்பு. Reviewed by Author on October 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.