இளைஞன் படுகொலை - பெண் உட்பட மூவர் கைது!
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 25ம் திகதி இரவு வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியது.
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் 25ம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிசார் ஒரு பெண் உட்பட மூவரை இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.
உயிரிந்தவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment