காசாவில் இருந்து எகிப்தில் தஞ்சமடைந்த 11 இலங்கையர்கள்!
காசா பகுதியில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் தற்போது எகிப்தை வந்தடைந்துள்ளதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் ரஃபா நுழைவாயில் வழியாக எகிப்துக்கு வந்து தற்போது அந்நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக அதன் தலைவர் பென்னட் குரே தெரிவித்தார்.
இவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை எகிப்தில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
17 இலங்கையர்கள் காஸா பகுதியில் தங்கியிருந்ததுடன், அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக அவர்களில் நால்வர் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காசாவில் இருந்து எகிப்தில் தஞ்சமடைந்த 11 இலங்கையர்கள்!
Reviewed by Author
on
November 03, 2023
Rating:

No comments:
Post a Comment