ONMAX DT நிறுவனத்தின் 5 பணிப்பாளர்கள் கைது
மோசடி பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ONMAX DT நிறுவனத்தின் பணிப்பாளர்கள் ஐந்து பேரும் நவம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ONMAX DT நிறுவனத்தின் 05 பணிப்பாளர்கள் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.
பிரமிட் பண பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ONMAX DT நிறுவனத்தின் 5 பணிப்பாளர்கள் கைது
Reviewed by Author
on
November 03, 2023
Rating:

No comments:
Post a Comment