மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு 'வாசிப்பை நேசிப்போம் புத்தகங்களை நண்பர்கள் ஆக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் வியாழக்கிழமை (2) புத்தக கண்காட்சியும் விற்பனையும் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டி.சி.அரவிந்தராஜ் தலைமையில் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இருந்து பாடசாலை மாணவர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நடைபாவணியாக பாடசாலையை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை முன்றலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஏற்பாட்டில் வீதி நாடகம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது.
இப்புத்தக கண்காட்சி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பிரதேச செயலக பணியாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கண்காட்சியில் பல புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதோடு விற்பனையும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்.
Reviewed by Author
on
November 02, 2023
Rating:

No comments:
Post a Comment