கிளிநொச்சி மேல் நீதி மன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு
பெண்ணொருவரைக் கொலைசெய்த வழக்கில் 9 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கிளிநொச்சி நீதிமன்றத்தினால் வழங்கப்படும் முதலாவது மரண தண்டனைத் தீர்ப்பு இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றதுடன் நீதிமன்றத்தின் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில் கடந்த 2014.04.12ஆம் திகதி மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்ட குற்றச்சாட்டில் அப்பெண்ணிக் காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 9 வருடங்களாக இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று (09) நீதிமன்றத்தினால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மேல் நீதி மன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு
Reviewed by Author
on
November 10, 2023
Rating:

No comments:
Post a Comment