அண்மைய செய்திகள்

recent
-

கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற "ZAHIRIAN MASTER CHESS CHAMPIONSHIP - 2023"

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது சாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை) இன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற ZAHIRIAN MASTER CHESS CHAMPIONSHIP - 2023 நிகழ்வுகள் மிக பிரமாண்டமாக  பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது.


இப்போட்டி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 450 போட்டியாளர்கள்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் அதிபர் எம். ஐ.ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலதிபரும், நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகருமான பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், உதவிக்கல்வி பணிப்பாளருமான என்.எம். அப்துல் மலிக் கலந்து சிறப்பித்ததோடு பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள்,  பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற "ZAHIRIAN MASTER CHESS CHAMPIONSHIP - 2023" Reviewed by Author on November 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.