வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து - ஒருவர் படுகாயம் வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முதியவரோருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டானிச்சூர் பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (25.12.2023) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக முதியவரோருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே திசையில் வந்த அதிவேக சீசியுடைய மோட்டார் சைக்கில் முதியவர் செலுத்திய மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்திருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து - ஒருவர் படுகாயம்
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முதியவரோருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டானிச்சூர் பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (25.12.2023) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக முதியவரோருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே திசையில் வந்த அதிவேக சீசியுடைய மோட்டார் சைக்கில் முதியவர் செலுத்திய மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
No comments:
Post a Comment