வவுனியா - வீரபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா - வீரபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர் கால்நடைவளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் குறித்த நபரை கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன நிலையிலே நேற்று (08.01) மாலை குறித்த நபர் விவசாய செய்கையினை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரி குழியில் உள்ள நீரில் மிதந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சடலம் செட்டிகுளம் பொலிசாரால் இரவு மீட்கப்பட்டதுடன், சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் பார்வையிட்டிருந்தார். 03 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் என்ற 78 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டவரார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by வன்னி
on
January 09, 2024
Rating:







No comments:
Post a Comment