அண்மைய செய்திகள்

recent
-

புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு ! ஆளுநர் பரிந்துரை! ஒருங்கிணைப்புகுழு எதிர்ப்பு!!

 புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு  ஆளுநர் பரிந்துரை! ஒருங்கிணைப்புகுழு எதிர்ப்பு!!




வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள காணியில்  தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இடம் வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.


வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன்  

தலைமையில் இன்று  இடம்பெற்றது.   


இதன்போது காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம்,தெங்கு அபிவிருத்திசபை,பனை அபிவிருத்திசபை, சமூக நீர்வழங்கல் திணைக்களம், தேசிய புலனாய்வு அலுவலகம், மற்றும் பொது அமைப்புக்களான முச்சகரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், பேருந்து உரிமையாளர் சங்கம், பாரவூர்திசங்கம், ஓய்வூதியர் சங்கம் ஆகியன தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியாபிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது


அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் இன்று அனுமதி கோரப்பட்டிருந்தது. 


இதன்போது பூங்காவீதியில் அமைந்துள்ள காணி தேசிய புலனாய்வு அலுவலுகத்திற்கு வழங்குவதற்காக ஆளுநரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 


இதனையடுத்து காணியினை அவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுதலைவர் தீலிபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.


புலனாய்வு பிரிவு அனைத்து இடங்களிலும் இயங்கமுடியும், அது ரகசியமாக இருக்கவேண்டிய அமைப்பு. எனவே நகரப்பகுதியில் அதற்கு காணி வழங்குவது பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.

புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு ! ஆளுநர் பரிந்துரை! ஒருங்கிணைப்புகுழு எதிர்ப்பு!! Reviewed by வன்னி on February 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.