கரைதுறைப்பற்று பிரதேச செயலக ஊழியர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பணி உத்வேகம் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி நெறி
கரைதுறைப்பற்று பிரதேச செயலக ஊழியர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பணி உத்வேகம் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி நெறி
பெரண்டினா நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பணி உத்வேகம் தொடர்பா இரண்டு நாள் பயிற்சி நெறி கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று(19) ஆரம்பமாகி நடைபெறுகின்றது
இன்றைய ஆரம்ப நிகழ்வில் கரைதுறைப்பற்று செயலக உதவி பிரதேச செயலாளர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ச.கயேந்திரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் சமுக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் சோ.ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இவ் பயிற்சியின் வளவாளராக உதவி தேர்தல்கள் ஆணையாளர் திரு ஆர்.சி.அமல்ராஜ் அவர்களால் விரிவுரைகள் இடம்பெற்று வருகிறது
குறித்த பயிற்சி நெறி நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment