அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பில் பண்பாட்டினை போற்றிடும் பாரிய கலைவிழா!

>முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் புதுவையின் பண்பாட்டினை போற்றிடுவோம் என்ற தொனிப்பொருளில் பாரிய கலாச்சார போட்டி நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை அறிவித்துள்ளது.


புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர் இன்று 03.03.2024 முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.


இந்த ஊடக சந்திப்பில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் தவசீலன், சமூகசேவை உத்தியோகத்தர் சஞ்சீவன்,முன்னாள் மத்தியகல்லூரி ஆசிரியை பத்மராணி,முன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஜெனமேஜெயந் உள்ளிட்டவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.


புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை முதலாவது புதுவையின் பண்பாட்டு பெருவிழாவினை சித்திரை மாதம் 6ஆம் திகதி நடத்தவுள்ளார்கள்.


புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை புதுக்குடியிருப்பு பிரதேச மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பண்பாடு,பாரம்பரிய இடர்காலவேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் இதன் கிழையினர் லண்டன் மாநாகரத்தில் இருக்கின்றார்கள் அவர்களுடனும் ஏனைய புலம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அந்தவகையில் கலை பண்பாடு பாரம்பரியங்களை பாதுகாக்கும் நோக்கில் புதுவை பண்பாட்டு பெருவிழாவினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த கலைஞர்களிடம் இருந்து

காத்தவராயன் சித்துநடைக்கூத்து

கோவலன் கூத்து

நாட்டார் இசை

தனி நடனம் பரதம்

குழுநடனம் கிராமிம்

சதுரங்கபோட்டி

குறுந்திரைப்படபோட்டி-தற்கால இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தொனிப்பொருளில் போட்டிகளை நடத்தவுள்ளோம்.


இதற்காக கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன கலைஞர்கள் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 0770858197  0774628597 0779713970


இந்த போட்டி நிகழ்வுகள் 30.03.2024 அன்று புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது வெற்றிபெறும் போட்டி நிகழ்வுகள் இறுதி நாளில் நடைபெறுவதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற மறைந்த சமூக சேவையாளர்களையும் கலைஞர்களையும் பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வும் இறுதி நாள் நிகழ்வில் நடைபெறவுள்ளது.


புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் லண்டன் கிழையினால் வழங்கப்பட்ட நிதி உதவிமூலம் 40 தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில்கடன்களும் 40 சிறு விவசாய முயற்சியாளர்களுக்கான மானிய உதவியும் வழங்கப்பட்டுள்ளது உள்ளுர் உற்பத்தி பொருட்களை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் அவர்களின் உற்பத்தி கண்காட்சியும் நடைபெறவுள்ளது.


கலை நிகழ்வுகளின் நிபந்தனைகள்

கூத்துக்கள் அதனுடன் நாட்டார் பாடல்கள் அந்த கிராமியம் சார்ந்த பாடல்; அமையவேண்டும் கிராமிய சொற்களும் புதிய ஆக்கப்பாடல்களாக அமையவேண்டும் நாட்டார் பாடல் தொழில்சார்ந்த பாடல்களாகவும், கிராமிய நடனம் தொழில்ரீதியான பிரதேசரீதியான தொழிலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நடன அமைப்பாக இருக்கவேண்டும்.

நாட்டார் பாடல்  திறந்த போட்டியாக அமைகின்றது மாணவர்கள் மற்றும் வெளியில் உள்ள கலைஞர்கள் பங்கிபற்றிக்கொள்ளமுடியும் பத்து நபர்கள் அதில் பங்கு பற்றமுடியும் பக்கவாத்தியங்களாக கிராமிய பக்கவாத்தியங்கள் ஆர்மோனியம்,டொல்கி போன்ற கிராமிய பக்கவாத்தியங்கள் பயன்படுத்தவேண்டும்.


கிராமிய நடனம் குழு நடனமாகவும் ஆசிரியர்களாலோ அல்லது நடத்துபவர்களாலோ பாடல் இசைக்கப்படவேண்டும் பாடல் ஒலிப்பதிவு கருவி ஊடாக செயற்படுத்தக்கூடாது.


புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் இந்த புதுவையின் பண்பாட்டினை போற்றிடுவோம் பண்பாட்டு பெருவிழாவில் அதிஸ்டலாப சீட்டிழுப்பினை நடத்தி அதன் ஊடாக சமூக பணிகளை மேற்கொள்ளவுள்ளாதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.



புதுக்குடியிருப்பில் பண்பாட்டினை போற்றிடும் பாரிய கலைவிழா! Reviewed by Author on March 03, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.