வவுனியா- புதூர் பகுதியில் புகையிரதம் மோதி பெண் பலி
வவுனியா- புதூர் பகுதியில் புகையிரதம் மோதி பெண் பலி
வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது புகையிரதம் மோதியதில் அவர் மரணமடைந்துள்ளார்.
இன்று (29.02) மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் புதூர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட போது புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மரணமடைந்த பெண்ணின் சடலம் மாங்குளம் புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவத்தில் 45 தொடக்கம் 55 வயதுடைய பெண்ணே மரணமடைந்வராவார். மரணமடைந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. புளியங்குளம் பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment