கனடாவில் இருந்து வந்து யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை (20) அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் கனடா நாட்டில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்பதும் , கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
Reviewed by Author
on
May 21, 2024
Rating:


No comments:
Post a Comment