தமிழ் பக்தி பாடல், பௌத்த வரலாற்று கதைகளுடன் இடம்பெற்ற வெசாக்தின கொண்டாட்டம்
கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வானத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனைக் வருடம் தோறும் மே மாதம் 23 திகதி கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் வெசாக்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் புத்த பெருமானின் பரிநிர்வானத்தை நினைவுகூரும் வரலாற்று கதைகள் வெளிச்ச வீடுகளில் தமிழ் மொழியில் ஒலி மூலம் வெளிப்படுத்தப்பட்டதோடு, சில வெளிச்ச வீடுகளில் ஞானம் பெறும் நிலையில் தமிழ் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டிருந்தது. அத்தோடு குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் இரவு உணவும் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த வெசாக் கொண்டாட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் இராணுவ தளபதிகள் சமூகமட்ட அமைப்புக்களின் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் சிறுவர்கள், பெரியோர்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வெசாக் தினத்தினை கொண்டாடியிருந்தனர்.
வெசாக்தினத்தினை முன்னிட்டு இன்றும், நாளையும் (24) உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
May 23, 2024
Rating:








1 comment:
This was lovely thanks for sharing this
Post a Comment