கார்த்திகை மலரை அவமதித்து தயாரிக்கப்பட்ட பாதனி- வடக்கில் கடும் எதிர்ப்பு
தமிழ் மக்களின் அடையாளங்களில் ஒன்றான கார்த்திகை மலரை அவமதிக்கு வகையில் பாதணி தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் உள்ள காட்சியறையில் இந்தப் பாதணி காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துறை ஐங்கரநேசன் குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
“தமிழ் தேசிய பரப்பிலேயே கார்த்திகைப் பூ குறித்த ஒரு காலத்தில் மாத்திரம் பூக்கின்ற தனித்துவமான மலர் என்பதை கருத்தில் கொள்ளாது குறித்த நிறுவனம் கால்களுக்கு அணியும் பாதணிகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது.
இந்த விடயமானது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தாம் பார்ப்பதாகவும், எனவே குறித்த நிறுவனம் அந்த பாதணிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Reviewed by Author
on
May 29, 2024
Rating:


No comments:
Post a Comment