உயிருடன் எரிக்கப்பட்ட பெண் தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
>யாழ்ப்பாணத்தில் குடும்ப பெண் ஒருவர் எரியூட்டபட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி அல்வாய் வீதியினை சேர்ந்த 45 வயதான இரத்தினவடிவேல் பவானி என்ற குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ். குருநகர் கொஞ்செஞ்சி மாதா சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
இருவருக்கும் இடையில் முரன்பாடு ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண் மீது தலையில் பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ். போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் யாழ். போதானவில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
Reviewed by Author
on
June 02, 2024
Rating:


No comments:
Post a Comment