மூன்று ஆண்டுகளாக தன் மூத்த மகளை பாலியல் துஸ்பிரியோகம் செய்த தந்தை இலங்கையில் நடக்கும் பதர வைக்கும் சம்பவம்
தந்தையொருவர் தனது மகளை மூன்று ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் வத்தளை, உஸ்வட்டகெய்யாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உஸ்வட்டகெய்யாவ பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த மகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான மகள் இது தொடர்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,
எனது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளாக என்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்தார். நான் எனது 15 வயதைக் கடந்த பின்னரே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்தேன்.
நான் இது தொடர்பில் நெருங்கிய பெண்ணொருவரிடம் தெரிவித்ததையடுத்து அந்த பெண் இது தொடர்பில் பமுணுகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.
இதன்போது, எனது தாய் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை மீள திரும்பப்பெறுமாறு என்னைக் கட்டாயப்படுத்தினார்.
பின்னர், நான் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை மீள திரும்பப்பெற்றதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எனது தந்தை விடுதலை செய்யப்பட்டார்.
எனது தந்தையின் அச்சுறுத்தல் காரணமாக நான் எனது வீட்டை விட்டு வெளியேறி வேறொரு வீட்டில் வசித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
June 29, 2024
Rating:


No comments:
Post a Comment