அண்மைய செய்திகள்

recent
-

பச்சிலைப்பள்ளி பிரதேச பண்பாட்டு பெருவிழா_2024

 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பச்சிலைப்பள்ளி கலாச்சார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டு பெருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது 


குறித்த விழாவானது எதிர்வரும் 03.07.2024 அன்று  கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் அமைந்துள்ள "ஆருக் .ஷ்கிருத்திக்" கலையரங்கத்தில் காலை 09.00 மணிக்கு  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரும் கலாச்சார பேரவையின் தலைவருமான த.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ளது


குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரான சு முரளிதரன்  கலந்து கொள்வதோடு வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் பணிப்பாளர்  லாகினி நிருபராஜ் அவர்களும் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்


இவ் விழாவில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு    பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பச்சிலைப்பள்ளி கலாச்சார பேரவையும் அழைப்பு விடுத்துள்ளனர்




பச்சிலைப்பள்ளி பிரதேச பண்பாட்டு பெருவிழா_2024 Reviewed by Author on June 30, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.