மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் (16) ஞாயிற்றுக்கிழமை மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(16) காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
கலந்துரையாடலை மேற்கொண்ட ஜனாதிபதி மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மன்னார் விஜயத்தையொட்டி மாவட்டத்தின் பல பாகங்களிலும் விசேட பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
Reviewed by Author
on
June 16, 2024
Rating:

No comments:
Post a Comment