சர்வதேச யோகா தினத்தையொட்டி 'பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா' எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்றைய தினம் (19) 'பெண்கள் வலுவூட்டல் களுக்கான யோகா' எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம் பெற்றது.
டிலாசால் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் (19) மிகவும் சிறப்பாக நடைபெற்ற குறித்த யோகா நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி .நாகராஜன், நானாட்டான் டிலாசால் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் மனோ, நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இடம் பெற்ற யோகா நிகழ்வில் பாடசாலையின் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நானாட்டான் சிவராஜா இந்து பாடசாலைக்கு இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
June 19, 2024
Rating:


No comments:
Post a Comment