வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளைஞர் பதற வைக்கும் சம்பவம்
வெள்ளை வானில் வந்த குழுவினர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை ஹென்டியங்கல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன.
கடத்தப்பட்ட இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் வெள்ளை வானில் வந்து ஹென்டியங்கல தேவாலயத்திற்கு அருகில் வைத்து இளைஞனை தாக்கி கடத்திச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Author
on
June 17, 2024
Rating:


No comments:
Post a Comment