உலகில் முதன் முதலில் தற்கொலை செய்து கொண்ட ரோபோ
தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து செயலிழந்த நிலையில், ரொபோவை பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ ஒரு இடத்தில் சுழன்று, பின்னர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோபோவின் தற்கொலைக்கு குமி நகர மக்கள் இரங்கல் தெரிவித்தனர்.
எனினும், அதற்கான தொழில்நுட்பக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தென் கொரிய ஊடகங்கள் இந்த சம்பவத்தை நாட்டின் முதல் ரோபோ தற்கொலை என்று தெரிவித்துள்ளன.
Reviewed by Author
on
July 03, 2024
Rating:


No comments:
Post a Comment