காதலியை பயமுறுத்த 17 வயது இளைஞன் செய்த செயலால் நேர்ந்த சோகம் வவுனியாவில் சம்பவம்
வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில், அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவரை காணவில்லை என மாமடுப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த இளைஞன் இன்றைய தினம் தூக்கிட்டு மரணித்த நிலையில் நந்திமித்திரகம பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டார்.
தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காக கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில், அது கழுத்தில் இறுகி மரணித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞனின் சடலம், உடற்கூற்று பரிசோதனையை அடுத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாமடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை
Reviewed by Author
on
July 01, 2024
Rating:


No comments:
Post a Comment