அண்மைய செய்திகள்

recent
-

வைத்தியர் அர்ச்சுனா விற்கு எதிராக பணிபுரக்கணிப்பில் ஈடுபடவிருக்கும் வடமாகாண வைத்தியர்கள்

 வடக்கு மாகாண அரச வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


வடக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவச்சேரி ஆதார வைத்திய சாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகாரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராகவும், அவருடைய தாபன விதி கோவைகளுக்கு எதிரான நடைமுறைகளுக்கு எதிராகவும்,



அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும் வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



எனவே, இதன் பிரகாரம் இன்று காலை 8 மணியிலிருந்து நாளை காலை 8 மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



வைத்தியர் அர்ச்சுனா விற்கு எதிராக பணிபுரக்கணிப்பில் ஈடுபடவிருக்கும் வடமாகாண வைத்தியர்கள் Reviewed by Author on July 08, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.