மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இலத்திரனியல் வகுப்பறைகளை திறந்து வைத்த சஜித் பிரேமதாச.
எதிர்கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அவர்களின் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (8) திங்கட்கிழமை இடம் பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது தாழ்வுபாடு,தாராபுரம் மற்றும் சித்திவிநாயகர் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட குறித்த இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினும் இணைந்து குறித்த SMART வகுப்பறைகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
மேலும் குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில புத்தகங்களை வழங்கி வைத்ததோடு,புதிய நூல்கள் கொள்வனவு செய்ய தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.
Reviewed by Author
on
July 08, 2024
Rating:


No comments:
Post a Comment