முரல் மீன் தாக்குதலால் உயிரிழந்த மீனவர்
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் குருநகர் 5மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவர் ஆவார்.
குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது.
முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by Author
on
July 02, 2024
Rating:


No comments:
Post a Comment