கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் கோர விபத்து
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் கோர விபத்து
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (04) காலை மாதம்பே - இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிவேகமாக வந்த லொறி ஒன்று எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டதாகவும் மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment