மாணவ குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - ஆபத்தான நிலையில் மாணவன்
அனுராதபுரத்தில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மாணவன் ஒருவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவ குழுக்கள் மோதல்
காயமடைந்த மாணவன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவ குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - ஆபத்தான நிலையில் மாணவன்
Reviewed by Author
on
August 13, 2024
Rating:
No comments:
Post a Comment