அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(29) பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.


.இதன் காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை(29) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.


  மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் இன்றைய தினம் வியாழக்கிழமை (29) மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.


நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் எவ்வித வழக்கு விசாரனைகளுக்கும் சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.


மேலும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (30) அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள உள்ளதோடு ,ஊடக சந்திப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி  இ.கயஸ்பெல்டானோ தெரிவித்தார்.







மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு Reviewed by Author on August 29, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.